
முதலமைச்சர் உள்ளிட்ட அனைத்து பதவிக்கும் ஸ்ரீதரன் தகுதியானவர் என கேரள மாநிலத் தலைவர் கே. சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.
கேரள மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில், அங்கு விஜயா யாத்திரா என்ற பெயரில் மாநிலம் முழுவதும் பேரணி மற்றும் பொதுக்கூட்டங்களை பாஜக மேற்கொண்டுவருகிறது. பாஜகவின் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து மாநிலத் தலைவர் கே. சுரேந்திரன் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது முதலமைச்சர் வேட்பாளர் தொடர்பான கேள்வி அவரிடம் எழுப்பப்பட்டது. 'மெட்ரோ மேன்' எனப்படும் ஸ்ரீதரன் பாஜகவில் இணைந்துள்ள நிலையில், அவரை முதலமைச்சர் வேட்பாளராக முன்னிறுத்துவீர்களா எனக் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த சுரேந்திரன், ஸ்ரீதரன் பாஜகவில் இணைந்தது, ஆளும் இடதுசாரிக் கூட்டணி, எதிர்க்கட்சியாக உள்ள காங்கிரஸ் கூட்டணி மீது கேரளாவில் உள்ள அவநம்பிக்கையை பிரதிபலிக்கிறது.
முதலமைச்சர் உள்ளிட்ட அனைத்து பதவிக்கும் ஸ்ரீதரன் தகுதியானவர். அவர் எந்தத் தொகுதியில் வேண்டுமானாலும் போட்டியிடாலம் எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: புதுவையில் தொடரும் ராஜினாமா; திமுக எம்.எல்.ஏ. வெங்கடேசன் பதவி துறப்பு