
பரபரப்பான புதுச்சேரி அரசியல் சூழலில் நாராயணசாமியின் அரசு கவிழும் சூழலில் உள்ளதாகக் கூறப்படுகிறது.
2016ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தம் 30 தொகுதிகளைக் கொண்ட புதுவையில் காங்கிரஸ் கட்சி 15 இடங்களிலும், திமுக 2 இடங்களிலும் வென்றன. அதுபோல் என்.ஆர். காங்கிரஸ் கட்சி 8 இடங்களிலும் அதிமுக 4 இடங்களிலும் வெற்றிபெற்றது. மாகே தொகுதியில் சுயேச்சை வேட்பாளர் வெற்றிபெற்றார்.
காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர்களில் 5 எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்துள்ளனர். ஒருவரது பதவி கட்சித் தாவல் சட்டத்தின்கீழ் பறிக்கப்பட்டுள்ளது.
இதுவரை மொத்தம் திமுக உறுப்பினர் வெங்கடேசன் உள்பட 6 எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்த நிலையில் தற்போது ஆளும் காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு அரசியல் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
காங்கிரஸ் 9, திமுக 2 சட்டப்பேரவை உறுப்பினர்கள் உள்ளனர். சுயேச்சை உறுப்பினர் ராமச்சந்திரன் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு கொடுத்துவருகிறார்.
இதனால், ஆளும் கட்சிக்கு 12 சட்டப்பேரவை உறுப்பினர்கள்தான் ஆதரவாக இருப்பார்கள், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் 14 பேர் இருப்பதால், ஆளும் கட்சி கவிழும் நிலையில் உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. பெரும்பான்மையை நிரூபிக்க 15 பேர் இருந்தால் போதும் என்ற நிலையில், ஆளும் அரசு தவித்துவருகிறது.