ஓராண்டிற்கும் மேல் ஈரான் சிறையில் வாடும் தமிழக மீனவர்கள்!
jail

சென்னை: தனது கணவர் மற்றும் எட்டு மீனவர்களை ஈரான் சிறையிலிருந்து விடுவிக்குமாறு, கன்னியாகுமரியை சேர்ந்த நிஷா என்பவர் வெளிநாடு வாழ் தமிழர்கள் மறுவாழ்வு மற்றும் நல ஆணையத்திடம் புகார் அளித்துள்ளார்.

இது தொடர்பாக நிஷா அளித்துள்ள புகாரில், ”கன்னியாகுமரியைச் சேர்ந்த எனது கணவர் காட்வின் ஜான் வெல்டன் மற்றும் எட்டு மீனர்கள், மீன்பிடித் தொழிலில் ஈடுபடுவதற்காக குவைத் நாட்டிற்கு உரிய ஆவணம் மற்றும் அனுமதியுடன் சென்றுள்ளனர். இந்த ஒன்பது மீனவர்களிடம் இருந்து, ஈரானின் இஸ்லாமிக் புரட்சி பாதுகாப்பு படை, விசை படகுகளை ப்யூஷார் என்ற இடத்தில் பறிமுதல் செய்துள்ளது. இது பற்றி கேள்வி எழுப்பிய மீனவர்களை எல்லை மீறி வந்ததாகக் கூறி, சட்டத்திற்கு புறம்பாக ஈரான் சிறையில் ஜனவரி 17, 2020 அன்று அடைத்துள்ளனர்.

இதையடுத்து ஈரானில் உள்ள இந்தியத் தூதரகத்தில் இதனை தெரியப்படுத்தியபோது, வழக்கறிஞர் ஒருவரை அறிமுகப்படுத்தினர். அவரோ எனது கணவருக்கு விடுதலை வாங்கித்தர முதலில் 3 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் கேட்டார். நானும் அவரது வார்த்தைகளை நம்பி, கடன் வாங்கி செப்டம்பர் 2020 அன்று பணத்தை அனுப்பி விட்டேன். இந்நிலையில், ஜனவரி 2021 அன்று, ஒன்பது பேருக்கும் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையை ஈரான் நீதிமன்றம் அளித்தது.

பின்னர் அந்த வழக்கறிஞர் மேலும் 4 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய் கேட்டார். தனது கணவர் 20 நாளில் விடுதலை ஆவார் என்றும் உறுதியளித்தார். நானும் 4 லட்சம் ரூபாய் கட்டியிருக்கிறேன். தமிழக அரசு எனது குடும்பத்திற்கு கொஞ்சம் கருணை காட்ட வேண்டும். எனது கணவர் மற்றும் எட்டு மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

இதையும் படிங்க: 10ஆம் வகுப்பு மாணவன் தற்கொலை: பள்ளியை முற்றுகையிட்டு பெற்றோர் போராட்டம்

    About us Privacy Policy
    Terms & Conditions Contact us

    • ETV
    • ETV
    • ETV
    • ETV

    Copyright © 2021 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.
    ETV

    INSTALL APP

    ETV

    CHANGE STATE

    ETV

    SEARCH

    ETV

    MORE

      • About us
      • Privacy Policy
      • Terms & Conditions
      • Contact us
      • Feedback

      Copyright © 2021 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.