ஈடிவி பாரத்தின் 11 மணி செய்திகள்
TOP

ஈடிவி பாரத்தின் 11 மணி செய்திச் சுருக்கம்.

உதயநிதிக்கு இடம் அறிவாலயத்தில் மட்டுமா, கோட்டையிலுமா?

முக்கியமாக, எதிர் முகாமைச் சேர்ந்த ஓபிஎஸ் தனது மகனை வளர்த்துக்கொண்டிருக்கிறார். அவருக்கு நிகராக தமது முகாமிலிருந்து ஒருவரை அனுப்ப வேண்டும் என அறிவாலயம் நினைக்கிறது. அதை உதயநிதி மூலம் நிறைவேற்ற நினைப்பதாகக் கூறப்படுகிறது.

கட்சிக்கு விசுவாசமா இருங்க? - நாராயணசாமி வேதனை

புதுச்சேரி மாநிலம் வஞ்சிக்கப்படுகிறது. மக்களால் புறக்கணிக்கப்பட்டவர்கள் அனைவரும் இணைந்து மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியைக் கவிழ்க்க முயற்சிக்கின்றனர் என முதலமைச்சர் நாராயணசாமி விமர்சனம்செய்துள்ளார்.

உடனுக்குடன்: புதுச்சேரி நம்பிக்கை வாக்கெடுப்பு!

புதுச்சேரியில் முதலமைச்சர் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசு பெரும்பான்மையை இழந்தது என்று சபாநாயகர் அறிவிப்பு.

நெருங்கும் தேர்தல்... கடந்த காலங்களில் நடந்தது என்ன?

தமிழ்நாடு என்று சென்னை மாகாணத்துக்கு பெயர் மாற்றம் வந்தது அண்ணாவின் ஆட்சிக்காலத்தில்தான். அப்படி இருந்த பேரறிஞர் அண்ணாவின் ஆட்சிக்காலம் அவரது அகால மரணத்திற்குப் பின் முடிவுக்கு வந்தது.

சாத்தூரில் மதுக்கடை அருகே ஆண் சடலம் மீட்பு: காவல் துறை விசாரணை

சாத்தூர் அருகே மதுக்கடை பின்புறம் ஆண் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.

நைஜீரியா ராணுவ விமானம் விபத்து: 7 பேர் உயிரிழப்பு!

நைஜீரியாவில் நடுவானில் இன்ஜின் கோளாறு காரணமாக தரையிறங்கிய ராணுவ விமானம் தரையில் மோதி வெடித்து விபத்துக்குள்ளானதில், ஏழு பேர் உயிரிழந்தனர்.

'இபிஎஸ், ஓபிஎஸ் ராமர் - லட்சுமணர் போன்றவர்கள்!'

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்லவமும் ராமர் - லட்சுமணர் போன்றவர்கள் என்று அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார்.

அஸ்ஸாம், மேற்கு வங்கத்திற்கு பிரதமர் இன்று பயணம் - பல்வேறு திட்டப்பணிகளை தொடங்கிவைக்க திட்டம்!

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள அஸ்ஸாம், மேற்கு வங்க மாநிலங்களுக்கு இன்று (பிப்.22) பயணம் மேற்கொள்ளும் பிரதமர் மோடி அங்கு பல திட்டங்களை தொடங்கிவைக்கிறார்.

பிக் பாஸ் புகழ் கணேஷ் வெங்கட்ராமன் நடிப்பில் தயாராகும் 'உன் பார்வையில்'

பிக் பாஸ் புகழ் கணேஷ் வெங்கட்ராமன் நடிக்கும் உருவாகும் உன் பார்வையில் படத்தின் படப்பிடிப்பு டேராடூன், உத்தராகண்ட் பகுதிகளில் நடைபெற்று வருகிறது.

வி.ஜே. சித்ராவின் 'காலங்கள் கரைகிறதே'

மறைந்த சின்னத்திரை நடிகை வி.ஜே. சித்ரா நடித்துள்ள கால்ஸ் படத்தின் பாடலான 'காலங்கள்' சாதனைப் படைத்துள்ளது.

    About us Privacy Policy
    Terms & Conditions Contact us

    • ETV
    • ETV
    • ETV
    • ETV

    Copyright © 2021 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.
    ETV

    INSTALL APP

    ETV

    CHANGE STATE

    ETV

    SEARCH

    ETV

    MORE

      • About us
      • Privacy Policy
      • Terms & Conditions
      • Contact us
      • Feedback

      Copyright © 2021 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.