நெல்லை தொகுதி பாஜகவுக்கா? - அதிர்ச்சியில் அதிமுகவினர்!
Breaking

நெல்லை: தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தையே இன்னும் தொடங்கப்படாத நிலையில் நெல்லை தொகுதியில் போட்டியிட பாஜக தீவிரம் காட்டி வருவதால் அதிமுக நிர்வாகிகள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

தமிழகத்தின் தேர்தல் களம் எடப்பாடி பழனிசாமி, மு.க.ஸ்டாலின் மேற்கொள்ளும் தினசரி பிரச்சாரங்களால் சூடுபிடித்துள்ளது. திமுகவை பொறுத்தளவில் கூட்டணி கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. அடுத்து தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தையும் விரைவிலேயே தொடங்க இருக்கிறது. ஆனால், அதிமுகவிலோ கூட்டணி குறித்தே இன்னும் உறுதியான முடிவு தெரியாமல் இருக்கிறது. இருந்தபோதும், பாஜக 40 தொகுதிகளும், அதற்கும் மேலாக பாமகவும், இவர்கள் இருவருக்கும் மேலாக தொகுதிகள் தங்களுக்கு கிடைக்க தேமுதிகவும் முயல்வதாகவும் செய்திகள் வருகின்றன.

இந்த நிலையில், கூட்டணி பேச்சுவார்த்தையே இன்னும் தொடங்கப்படாத போது, நெல்லை சட்டமன்ற தொகுதியில் பாஜகவினர் போட்டியிட தீவிரம் காட்டி வருவது, நெல்லை மாவட்ட அதிமுகவினரை கடும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இத்தொகுதியை பாஜக குறிவைக்க முக்கிய காரணம் அக்கட்சியின் மாநில துணைத்தலைவர் நயினார் நாகேந்திரன். முன்பு அதிமுகவில் இருந்த நயினார், ஜெயலலிதா அமைச்சரவையில் போக்குவரத்துத்துறை அமைச்சராகவும் இருந்தவர். பின்னர் பாஜகவில் சேர்ந்து மாநிலத் துணைத் தலைவரானார். ஆனாலும் தலைவர் பதவியை எதிர்பார்த்து சோர்ந்திருந்த நயினாரை, அதிமுக கூட்டணியில் திருநெல்வேலி தொகுதியை எப்படியாவது பெற்று வெற்றிபெற வைப்பதாக உறுதியளிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது

நயினார் நாகேந்திரன்
நயினார் நாகேந்திரன்

இதனை உறுதிப்படுத்தும் வகையில் நெல்லை மாவட்டத்தில் அண்மையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய பாஜக மாநில தலைவர் முருகன், இத்தொகுதியில் நாம் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்றார். இதனால் கிட்டத்தட்ட திருநெல்வேலி சட்டமன்ற தொகுதியில் இந்த முறை பாஜக களமிறங்குவது உறுதியாகியுள்ளது. இதை மேலும் உறுதிப்படுத்தும் வகையில், திருநெல்வேலி பகுதியில் ஆங்காங்கே பாஜகவினர் சுவர் விளம்பரமும் செய்து வருகின்றனர்.

அதேநேரம் அதிமுகவின் நெல்லை மாவட்ட செயலாளரான தச்சை கணேசராஜாவும் போட்டியிட ஆர்வம் காட்டி வருகிறார். இச்சூழலில் பாஜக தேர்தல் அலுவலகத் திறப்பு விழா நாளை நயினார் நாகேந்திரனின் ஹோட்டலில் நடக்க இருக்கிறது. எனவே திருநெல்வேலி தொகுதியில் நயினார் நாகேந்திரன் போட்டியிட அதிமுக தலைமையும் பச்சைக்கொடி காட்டியுள்ளதாக பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால் திருநெல்வேலி மாவட்ட அதிமுகவினர் அதிர்ச்சியிலும் விரக்தியிலும் இருக்கின்றனர்.

இதையும் படிங்க: 'அதிமுக ஆட்சியில் கட்டப்பஞ்சாயத்து ரவுடிசம் இல்லை'

    About us Privacy Policy
    Terms & Conditions Contact us

    • ETV
    • ETV
    • ETV
    • ETV

    Copyright © 2021 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.
    ETV

    INSTALL APP

    ETV

    CHANGE STATE

    ETV

    SEARCH

    ETV

    MORE

      • About us
      • Privacy Policy
      • Terms & Conditions
      • Contact us
      • Feedback

      Copyright © 2021 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.