
இந்தியா- வங்கதேச எல்லைப் பகுதியைத் தாண்டியதாக கால்நடை கடத்தல்காரர்கள் மீது எல்லைப் பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
டாக்கா: இந்திய-வங்கதேச எல்லைப் பகுதியின் இரு பகுதிகளிலும் அப்பகுதி மக்கள் கால்நடைகளைத் திருடி விற்பனை செய்வது வழக்கமான ஒன்று. இரு நாடுகளுக்கு இடையே சர்வதேச எல்லை இருப்பதால், இங்கு எப்பொழுதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருக்கும்.
இரு நாடுகளுக்கிடையேயான சர்வதேச எல்லைப் பகுதிகளில், பாதுகாப்பு பணியினை மேற்கொண்டு வந்த எல்லைப் பாதுகாப்பு படையினரின் 100-ஆவது பட்டாலியன் பிரிவினருக்கு எல்லைப் பகுதியில் யாரோ ஊடுருவுவது போன்று தெரிந்துள்ளது.
இதையடுத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பட்டாலியன் பிரிவின் காவலர் ஒருவர், எல்லைப் பகுதிக்கு மிக அருகே வந்த கால்நடை கடத்தல்காரர்கள் மூவரை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளார்.
இதில், இருவர் லேசான காயமும், ஒருவர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் எல்லை மருத்துவத்துறையினர் தெரிவித்துள்ளனர்.