'அன்பிற்கினியாள்' பட ட்ரெய்லருக்கு குவியும் பாராட்டு!
anbukkuiniyal

சென்னை: அருண் பாண்டியன் - கீர்த்தி பாண்டியன் நடிப்பில் உருவாகியுள்ள 'அன்பிற்கினியாள்' படத்தின் ட்ரெய்லர் தற்போது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

மலையாளத்தில் 2019ஆம் ஆண்டு மாதுகுட்டி சேவியர் இயக்கத்தில் வெளியான படம் 'ஹெலன்'. நடிகை அன்னா பென், நடிகர் லால் நடித்திருந்த இப்படம் ரசிகர்களிடையே பெரும் வரேவற்பை பெற்றிருந்தது. இந்த படம் தற்போது தமிழில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது.

தமிழில் 'இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா', ஜுங்கா உள்ளிட்ட படங்களை இயக்கிய கோகுல் 'ஹெலன்' மலையாளப்படத்தை 'அன்பிற்கினியாள்' என தமிழில் ரீமேக் செய்துள்ளார். அப்பா - மகள் வாழ்வியலைச் சொல்லும் கதையில் நிஜ அப்பா - மகள் நடித்தால் எப்படியிருக்கும்...? அந்தக் காட்சிகளின் நம்பகத்தன்மை அனைத்துமே இன்னும் உணர்வுப்பூர்வமாக இருக்கும் என நினைத்து நடிகர் அருண் பாண்டியன் அவரது மகள் கீர்த்தி பாண்டியன் இருவரையும் கோகுல் நடிக்கவைத்துள்ளார். கோகுல் இயக்கிய இப்படத்தினை நடிகர் அருண்பாண்டியன் தயாரித்துள்ளார். மகேஷ் முத்துசுவாமி ஒளிப்பதிவு செய்துள்ளார்.

  • Happy to launch the trailer of #Anbirkiniyal 😊👍#AnbirkiniyalTrailer - https://t.co/qSgbZQNVPl

    Best wishes to @DirectorGokul @iarunpandianc @iKeerthiPandian and the team.

    — Actor Karthi (@Karthi_Offl) February 22, 2021

இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிகட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. 'அன்பிற்கினியாள்' பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ள நிலையில், தற்போது ட்ரெய்லரும் வெளியானது. நீண்ட வருடங்கள் கழித்து நடிப்பு உலகிற்கு திரும்பியுள்ள அருண் பாண்டியனின் நடிப்பு நன்றாக உள்ளதாக சமூக வலைதளத்தில் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும் ட்ரெய்லர் வெளியான சில மணி நேரத்திலேயே மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இதையும் படிங்க: நிஜ அப்பா - மகள் நடித்துள்ள அன்பிற்கினியாள்!

    About us Privacy Policy
    Terms & Conditions Contact us

    • ETV
    • ETV
    • ETV
    • ETV

    Copyright © 2021 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.
    ETV

    INSTALL APP

    ETV

    CHANGE STATE

    ETV

    SEARCH

    ETV

    MORE

      • About us
      • Privacy Policy
      • Terms & Conditions
      • Contact us
      • Feedback

      Copyright © 2021 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.