யார் இந்த சுருளி... வெளியான 'ஜகமே தந்திரம்' டீஸர்!
Breaking

தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள 'ஜகமே தந்திரம்' படத்தின் டீஸர் தற்போது வெளியாகியுள்ளது.

'ஒய் நாட்' ஸ்டுடியோஸ் தயாரிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'ஜகமே தந்திரம்'. தனுஷின் 40ஆவது படமான இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

ஐஸ்வர்யா லக்ஷ்மி, கலையரசன், ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ ஆகியோர் நடித்துள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு லண்டன், மதுரை உள்ளிட்ட இடங்களில் நடைபெற்றது. போஸ்ட் புரொடக்ஷ்ன் பணிகள் நிறைவடைந்த நிலையில், 2020ஆம் ஆண்டு மே 1ஆம் தேதி திரைக்கு வரவிருந்த இப்படம், ஊரடங்கு உத்தரவு காரணமாக தள்ளிப்போனது.

இந்த நிலையில், சமீபத்தில் இப்படத்தில் இருந்து வெளியான 'ரகிட ரகிட', 'புஜ்ஜி' பாடல்கள் சமூகவலைதளத்திலும் ரசிகர்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பை பெற்றது. இதனையடுத்து இன்று இப்படத்தின் டீஸர் வெளியாகியுள்ளது.

  • Podu t̶h̶a̶g̶i̶d̶a̶ ̶t̶h̶a̶g̶i̶d̶a̶ Rakita Rakita! Suruli is coming soon to Netflix. #JagameThandhiramOnNetflix@dhanushkraja @karthiksubbaraj @sash041075 @chakdyn @Music_Santhosh @StudiosYNot @RelianceEnt @Shibasishsarkar @APIfilms @SonyMusicSouth @onlynikil pic.twitter.com/NbBDu3LFcU

    — Netflix India (@NetflixIndia) February 22, 2021

மதுரையில் ஹோட்டல் ஒன்றில் புரோட்டா மாஸ்டராக சுருளி கதாபாத்திரத்தில் வரும் தனுஷ், லோக்கல் டானாக இருந்து இண்டர்நேஷ்னல் டானாக மாறுவது போன்ற காட்சிகள் டீஸரில் இடம்பெற்றுள்ளன.

டீஸர் வெளியான சில நிமிடங்களிலேயே சமூகவலைதளங்களை ஆக்கிரமிக்க தொடங்கிவிட்டது. இந்த படம் திரையரங்கில் வெளியாகமல் நேரடியாக நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. இதன் வெளியீட்டு தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.

இதையும் படிங்க: 'ஜகம்' சுகமடைந்தும் 'ஜகமே தந்திரம்' வெளியாகும் கார்த்திக் சுப்பராஜ்

    About us Privacy Policy
    Terms & Conditions Contact us

    • ETV
    • ETV
    • ETV
    • ETV

    Copyright © 2021 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.
    ETV

    INSTALL APP

    ETV

    CHANGE STATE

    ETV

    SEARCH

    ETV

    MORE

      • About us
      • Privacy Policy
      • Terms & Conditions
      • Contact us
      • Feedback

      Copyright © 2021 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.