பிக் பாஸ் புகழ் கணேஷ் வெங்கட்ராமன் நடிப்பில் தயாராகும் 'உன் பார்வையில்'
Breaking

பிக் பாஸ் புகழ் கணேஷ் வெங்கட்ராமன் நடிக்கும் உருவாகும் உன் பார்வையில் படத்தின் படப்பிடிப்பு டேராடூன், உத்தராகண்ட் பகுதிகளில் நடைபெற்று வருகிறது.

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்கள் மனங்களில் இடம்பிடித்த நடிகர் கணேஷ் வெங்கட்ராமன் தற்போது ஒரு ரொமான்ஸ் த்ரில்லர் திரைப்படத்தில் நடிக்கிறார்.

“உன் பார்வையில்” என்று பெயரிடப்பட்ட இப்படத்தினை Kaho na pyar hai, Pardes, Taal ஆகிய பாலிவுட் மெகாஹிட் படங்களின் ஒளிப்பதிவாளர் கபிர் லால் இயக்குகிறார். இது தமிழில் இவருக்கு அறிமுகப் படமாகும்.

இப்படத்தின் படப்பிடிப்பு டேராடூன், உத்தராகண்ட் பகுதிகளில் நடைபெற்று வருகிறது. இப்படமானது தமிழ், தெலுங்கு, மராட்டி, பெங்காலி மொழிகளில் படமாகிறது. தமிழ் பதிப்பில் கணேஷ் வெங்கட்ராமன், பார்வதி நாயர் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.

ரொமான்ஸ் த்ரில்லராக உருவாகும் இப்படத்தில் கணேஷ் வெங்கட்ராமன் மனநல நிபுணராகவும், பார்வதி நாயர் தொழிலதிபராகவும் நடிக்கிறார்கள். படத்தில் இருவரின் கெமிஸ்ட்ரி அனைவரையும் கவரும்படி அமையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இது குறித்து நடிகர் கணேஷ் வெங்கட்ராமன் கூறியதாவது:

Kaho na pyar hai, Pardes, welcome back போன்ற பல படங்களில் கபிர் அவர்கள் ஒளிப்பதிவில் செய்த மேஜிக்கை கண்டு பிரமித்திருக்கிறேன். அவர் என்னிடம் கதை சொன்னபோது மிக பரபரப்பான சுவாரஸ்யம் மிகுந்த கதையாக இருந்தது. இம்மாதிரியான ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கவே காத்திருந்தேன். படம் அழகாக உருவாகி வருகிறது என்றார்.

“உன் பார்வையில்” படத்தினை லவ்லி வேல்ட் ப்ரொடெக்‌ஷன் (Lovely World Production) சார்பில் அஜய் சிங் தயாரிக்கிறார். விறுவிறுப்பாக உருவாகிவரும் இப்படத்தினை வரும் ஜூலை மாதம் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

இதையும் படிங்க: வி.ஜே. சித்ராவின் 'காலங்கள் கரைகிறதே'

    About us Privacy Policy
    Terms & Conditions Contact us

    • ETV
    • ETV
    • ETV
    • ETV

    Copyright © 2021 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.
    ETV

    INSTALL APP

    ETV

    CHANGE STATE

    ETV

    SEARCH

    ETV

    MORE

      • About us
      • Privacy Policy
      • Terms & Conditions
      • Contact us
      • Feedback

      Copyright © 2021 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.