பேச்சிலர் பார்ட்டி கொண்டாடிய 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' நடிகை!
Breaking

கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தில் வர்ஷா என்ற கதாபாத்திரம் மூலம் ரசிகர்களின் இதயங்களை கொள்ளையடித்த நடிகை நிரஞ்சனி தனது தோழிகளுடன் பேச்சிலர் பார்ட்டி கொண்டாடினார்.

கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் இயக்குநர் தேசிங்கு பெரியசாமி - நடிகை நிரஞ்சனி ஆகியோருக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளது. இதையடுத்து நடிகை நிரஞ்சனி தனது தோழிகளுடன் பேச்சிலர் பார்டியை கொண்டாடி உள்ளார்.

2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் வெளியான கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தில் நாயகனாக துல்கர் சல்மான், நாயகியாக ரிது வர்மா நடித்திருந்தனர். இவர்களின் தோழியாகவும், படம் முழுக்க தோன்றும் கதாபாத்திரத்திலும் நிரஞ்சனி நடித்திருந்தார். படத்தில் ராயல் என்ஃபில்டு பைக்கை ஸ்டைலாக ஓட்டியவாறு இவர் தோன்றும் அறிமுக காட்சி உள்பட பல காட்சிகளில் தனது அசத்தலான நடிப்பால் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தார்.

லாக்டவுன் அறிவிப்பு முன்னரே வெளியான இந்தப் படம் நல்ல வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட் ஆனது. இப்படத்தின் இயக்குநர் தேசிங்கு பெரியசாமி - நிரஞ்சனி ஆகியோர் காதலித்து வந்தனர். இவர்களது காதலுக்கு இருவீட்டாரும் சம்மதம் தெரிவித்த நிலையில், விரைவில் திருமணம் செய்து கொள்ளப்போவதாக அறிவித்தனர்.

இதையடுத்து தற்போது திருமணத்துக்கு முன்பு தோழிகளுடன் இவர் கொண்டாடிய பேச்சிலர் பார்டியின் புகைப்படத்தை, நிரஞ்சனியின் சகோதரியும் நடிகையுமான விஜயலட்சுமி இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

நடிகை நிரஞ்சனி தேசிய விருது பெற்ற இயக்குநர் அகத்தியனின் மூன்றாவது மகள் ஆவார். ஏற்கெனவே அகத்தியனின் இரண்டு மகள்களான கனி மற்றும் விஜயலட்சுமி பிரபல இயக்குநர்களை திருமணம் செய்துள்ளனர். இவர்கள் வரிசையில் தற்போது மூன்றாவது மகளான நிரஞ்சனியும் இயக்குநரையே திருமணம் செய்ய உள்ளார்.

நடிகையாகவதற்கு முன்னர் நிரஞ்சனி, த்ரிஷா இல்லனா நயன்தாரா, பென்சில், கபாலி உள்பட பல படங்களுக்கு காஸ்ட்டியூம் டிசைனராக பணிபுரிந்துள்ளார்.

இதையும் படிங்க: ஆண் குழந்தைக்கு தாயான கரீனா கபூர்!

    About us Privacy Policy
    Terms & Conditions Contact us

    • ETV
    • ETV
    • ETV
    • ETV

    Copyright © 2021 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.
    ETV

    INSTALL APP

    ETV

    CHANGE STATE

    ETV

    SEARCH

    ETV

    MORE

      • About us
      • Privacy Policy
      • Terms & Conditions
      • Contact us
      • Feedback

      Copyright © 2021 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.