ஜீவனின் 'பாம்பாட்டம்' படப்பிடிப்பில் மல்லிகா ஷெராவத்!
Breaking

ஜீவன் நடிக்கும் பாம்பாட்டம் திரைப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பில் மல்லிகா ஷெராவத் சம்பந்தமான காட்சிகள் மும்பையில் பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டு எடுக்கப்படவுள்ளன.

ஓரம்போ, வாத்தியார் போன்ற படங்களை தயாரித்த வைத்தியநாதன் பிலிம் கார்டன் பட நிறுவனம் சார்பில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என ஐந்து மொழிகளில் பிரமாண்டமாக வி. பழனிவேல் தயாரிக்கும் திரைப்படம் பாம்பாட்டம்.

இத்திரைப்படத்தில் ஜீவன் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகிகளாக ரித்திகா சென், யாஷிகா ஆனந்த் ஆகியோர் நடிக்கிறார்கள். தமிழில் நீண்ட இடைவெளிக்கு பிறகு இளவரசி காதபாத்திரத்தில் மல்லிகா ஷராவத் நடிக்கிறார்.

இப்படத்துக்கு வடிவுடையான் கதை, திரைக்கதை, வசனம், எழுதி இயக்குகிறார். இது 1800, 1947, 1990 என மூன்று கால கட்டங்களில் நடக்கும் வரலாற்று கதை. ஹாரர், த்ரில்லர் அம்சங்கள் கலந்த இந்தப் படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு முடிந்து தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்கியுள்ளது.

பெரும் பொருட்செலவில் மும்பையில் செட் அமைக்கப்பட்டு வருகிறது. அங்கு நடிகை மல்லிகா ஷெராவத் நடிக்கவுள்ள முக்கியமான காட்சிகள் படமாக்கவுள்ளன.

இதையும் படிங்க : துப்பாக்கி சுடும் பயிற்சிக்கு மீண்டும் ரைஃபிள் கிளப் வந்த அஜித்!

    About us Privacy Policy
    Terms & Conditions Contact us

    • ETV
    • ETV
    • ETV
    • ETV

    Copyright © 2021 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.
    ETV

    INSTALL APP

    ETV

    CHANGE STATE

    ETV

    SEARCH

    ETV

    MORE

      • About us
      • Privacy Policy
      • Terms & Conditions
      • Contact us
      • Feedback

      Copyright © 2021 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.