டீசரில் 'மோடி ஹீரோ' என்று வசனம் - 'வா பகண்டையா' இயக்குநருக்கு மிரட்டல்!
Breaking

அண்மையில் வெளியான 'வா பகண்டையா' டீசருக்கு இயக்குநர்கள் பேரரசு, ஆர்.கே. செல்வமணி ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து சாதி அமைப்புகள், அரசியல் கட்சிகள் மிரட்டல் விடுத்துவருவதாக இயக்குநர் ப.ஜெயகுமார் தெரிவித்துள்ளனர்.

'வா பகண்டையா' திரைப்படத்தின் இசை, டீசர் வெளியீட்டு விழா அண்மையில் நடைபெற்றது. படத்தின் டீசரில், பிரதமர் மோடியை ஹீரோ என்று குறிப்பிடும் வசனம், 'பகுத்தறிவு பேசி பைத்தியமாக போறீங்க', 'ஜாதி என்பது மாம்பழத்திற்குள் இருக்கும் வண்டு', 'வர்ணம் நல்லதுதான்' போன்ற வசனங்கள் இடம்பெற்றிருந்தன.


இந்த டீசரை பார்த்த இயக்குநர்கள் பேரரசு, ஆர்.கே.செல்வமணி ஆகியோர் இசை வெளியீட்டு விழாவில் தங்களது எதிர்ப்புகளை பதிவு செய்தனர். இந்நிலையில் 'வா பகண்டையா' படத்திற்கு சில அரசியல் கட்சிகளும், சாதி அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றன.

வா பகண்டையா இயக்குநர் ப ஜெயகுமார்
வா பகண்டையா படத்தின் இசை வெளியீட்டு விழா
இசை வெளியீட்டு விழாவுக்குப் பிறகு வா பகண்டையா படத்தை தயாரித்து எழுதி இயக்கியிருக்கும் ப.ஜெயகுமாருக்கு அடையாளம் தெரியாத நபர்கள் தொலைபேசி மூலம் மிரட்டல் விடுத்து வருகின்றனர்.
இதுகுறித்து இயக்குநர் ப.ஜெயகுமாரிடம் கேட்ட போது, ” இப்படத்தில் இடம்பெற்றுள்ள சில வசனங்களுக்காக எனக்கு பலவிதமான மிரட்டல்கள் வருகின்றன. குறிப்பாக, பிரதமர் மோடியை ஹீரோ என்று குறிப்பிட்டதற்கு பலர் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். என்னை பொருத்தவரை பிரதமர் மோடி ஹீரோதான், எனவே அதை என் படத்தில் பதிவு செய்தேன்.


தேர்தல் சமயத்தில், பாஜக கட்சிக்கு பரப்புரை செய்யும் கார்ப்பரேட் நிறுவனத்தின் கைக்கூலி என்றும் என்னை விமர்சிக்கிறார்கள். நான் அரசியலுக்காகவும், சாதி பிரிவினையை தூண்டி, அதன் மூலம் பொருளாதார ரீதியாக ஆதாயம் தேடுவதற்காகவும் இந்தப் படத்தை எடுக்கவில்லை. தேசப்பற்றுக் கொண்ட தமிழனாகத்தான் இந்தப் படத்தை எடுத்திருக்கிறேன். முழு படத்தையும் பார்த்தால் அது புரியும்.

வெறும் டீசரில் இடம்பெற்ற சில வசனங்களை வைத்துக்கொண்டு என் படம் தவறான படம், என்று சொல்வதில் நியாயம் இல்லை. அரசு அலுவலரின் தலைமையின் கீழ் இயங்கும் தணிக்கை குழுவினரின் சான்றிதழ் பெற்றிருக்கிறேன். பிறகு எப்படி என் படம் தவறான படமாகும்.

என் படத்தை தவறான படம் என்று கூறி என்னை மிரட்டுபவர்களில் சிலர் படத்தை போட்டுக்காட்டிய பிறகே ரிலீஸ் செய்ய வேண்டும் என்று சொல்கிறார்கள். எதிர்ப்பவர்களுக்கும், மிரட்டுபவர்களும் பயந்துபோய் என் படத்தை அவர்களுக்கு போட்டுக்காட்டமாட்டேன். இது மக்களுக்காக, என் பணத்தில் எடுத்த படம், இதை நேரடியாக மக்களுக்குத்தான் போட்டுக்காட்டுவேன்.

யார் எதிர்த்தாலும், எப்படி மிரட்டினாலும் எதற்கும் அஞ்சாமல், அனைத்து பிரச்னைகளையும் எதிர்க்கொண்டு என் படத்தை எப்படி வெளியிட வேண்டும் என்பது எனக்குத் தெரியும். விரைவில் படத்தின் ட்ரைலரை வெளியிடப்போகிறேன், அது டீசரை விட பல மடங்கு அதிர்வை ஏற்படுத்தும்” என்றார்.

இதையும் படிங்க: எஸ்பிபி பணியாற்றிய கடைசி படத்தின் பாடல்கள் ரிலீஸ்!

    About us Privacy Policy
    Terms & Conditions Contact us

    • ETV
    • ETV
    • ETV
    • ETV

    Copyright © 2021 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.
    ETV

    INSTALL APP

    ETV

    CHANGE STATE

    ETV

    SEARCH

    ETV

    MORE

      • About us
      • Privacy Policy
      • Terms & Conditions
      • Contact us
      • Feedback

      Copyright © 2021 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.