கங்காதேவி: யோகி பாபுவின் ஹாரர் திரைப்படம்

யோகி பாபு முக்கிய வேடத்தில் நடிக்கும் காமெடி, த்ரில்லர் கலந்த ஹாரர் திரைப்படமாக 'கங்காதேவி' என்ற திரைப்படம் உருவாகிவருகிறது.
ஸ்ரீகருணை ஆனந்தா மூவிஸ் தயாரிப்பில், மில்கா செல்வகுமார் இயக்கும் புதிய படம் 'கங்காதேவி'. இவர் இயக்குநர் ராகவா லாரன்ஸிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர்.


குறிப்பிட்ட விளையாட்டை மையப்படுத்தி, சஸ்பென்ஸ், த்ரில்லர், ஹாரர், காமெடி கலந்து திரைக்கதை உருவாக்கியிருக்கிறோம். 'நெஞ்சம் மறப்பதில்லை' திரைப்படம் போல பூர்வஜென்ம கதையும் பின்னிப் பிணைந்திருக்கும். குடும்பத்துடன் சிரித்து ரசிக்கும் படமாக இருக்கும். பெரிய இசையமைப்பாளர் ஒருவர் இத்திரைப்படத்துக்கு இசையமைக்க உள்ளார்" என்றார்.
இதையும் படிங்க : பா.ரஞ்சித் தயாரிப்பில் யோகி பாபு!