
ஆட்ரியாடிக் பெர்ல் குத்துச்சண்டை போட்டியில் இந்திய தரப்பில் வின்கா, சனமாச்ச சானு ஆகியோர் தங்கப்பதக்கங்களை வென்று அசத்தியுள்ளனர்.
நடப்பாண்டிற்கான ஆட்ரியாடிக் பெர்ல் குத்துச்சண்டைப் போட்டிகள் மாண்டிநீக்ரோ நாட்டில் நடைபெற்றுவருகின்றன.
நேற்று நடைபெற்ற மகளிர் குத்துச்சண்டை 60 கிலோ பிரிவில் இந்தியாவின் வின்கா (Vinka), மால்டோவாவின் கிறிஸ்டினா குய்பரை எதிர்கொண்டார். இப்போட்டியில் வின்கா 5-0 என்ற கணக்கில் கிறிஸ்டினா குய்பரை வீழ்த்தி தங்கப்பதக்கத்தைத் தட்டிச்சென்றார்.
அதேபோல் மகளிர் 75 கிலோ எடைப் பிரிவின் இறுதிப்போட்டியில் இந்தியாவின் சனமாச்ச சானு (Sanamacha chanu), சகநாட்டு வீராங்கனையான ராஜ் சாஹிபாவை எதிர்கொண்டார். விறுவிறுப்பான இப்போட்டியின் முடிவில் சனமாச்ச 5-0 என்ற புள்ளிக்கணக்கில் ராஜ் சாஹிபாவை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை வென்றார்.
இதன்மூலம் ஆட்ரியாடிக் பெர்ல் குத்துச்சண்டைப் போட்டியில் இந்திய அணி இன்று ஒரேநாளில் இரண்டு தங்கம், இரண்டு வெள்ளி, ஒரு வெண்கலப் பதக்கத்தைக் கைப்பற்றி அசத்தியது.
இதையும் படிங்க: ‘ஐபிஎல் ஏலம் எதிர்பார்த்த ஒன்றே’ - ஆரோன் ஃபின்ச்