
இன்றைய நிகழ்வுகள் மற்றும் செய்திகளின் தொகுப்பைப் பார்க்கலாம்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் இடைக்கால பட்ஜெட் தாக்கல்
தமிழ்நாடு சட்டப்பேரவையில் இடைக்கால பட்ஜெட்டை துணை முதலமைச்சரும், நிதியமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம் இன்று காலை 11 மணியளவில் தாக்கல்செய்கிறார்.

ஜேஇஇ முதல் நிலைத் தேர்வுகள் தொடக்கம்
நாடு முழுவதும் இந்த ஆண்டிற்கான ஜேஇஇ முதல் நிலைத் தேர்வுகள் இன்று (பிப். 23) முதல் தொடங்குகின்றன.

சட்டப்பேரவையில் மூன்று தலைவர்களின் படங்கள் திறப்பு
வ.உ.சிதம்பரனார், டாக்டர் பி. சுப்பராயன், ஓ.பி. ராமசாமி ரெட்டியார் உள்ளிட்ட மூன்று தலைவர்களின் திருவுருவப் படங்களை சட்டப்பேரவை மண்டபத்தில் முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி இன்று திறந்துவைக்கிறார்.

குஜராத் 6 மாநகராட்சிகளுக்கான தேர்தல் முடிவு
குஜராத் மாநிலத்தின் 6 மாநகராட்சிகளுக்கான தேர்தல் கடந்த 21ஆம் தேதி நடைபெற்றது. வாக்குகள் இன்று (பிப். 23) எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

தென் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
தென் மாவட்டங்களில் இன்று இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
