
இன்றைய நிகழ்வுகள் மற்றும் செய்திகளின் தொகுப்பைப் பார்க்கலாம்.
நாராயணசாமி அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு

புதுச்சேரி சட்டப்பேரவையில் முதலமைச்சர் நாராயணசாமி அரசு மீது இன்று (பிப். 22) நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுகிறது. இதுவரை புதுச்சேரியில் ஆறு சட்டப்பேரவை உறுப்பினர்கள் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுகிறது.
தமிழ்நாடு மெட்ரோ ரயில் கட்டணம் குறைப்பு

தமிழ்நாடு அரசு மெட்ரோ ரயிலுக்கான கட்டணத்தைக் குறைக்க உத்தரவிட்டதைத் தொடர்ந்து, கட்டணக் குறைப்பு இன்று (பிப்.22) முதல் அமலுக்கு வருகிறது. பயண அட்டை மூலம் டிக்கெட் பெறுபவர்களுக்கு பத்து விழுக்காடும், கியூ.ஆர். குறியீடு மூலம் டிக்கெட் பெறுபவர்களுக்கு 20 விழுக்காடும் தள்ளுபடி வழங்கப்படுகிறது.
புதுச்சேரியில் பள்ளிகளுக்கு விடுமுறை

புதுச்சேரியில் பெய்துவரும் தொடர் மழை காரணமாக இன்று (பிப். 22) பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
பொள்ளாச்சி காமாட்சி அம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம்

பொள்ளாச்சி பாலமாணிக்கம் வீதி காமாட்சி அம்மன் கோயில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா இன்று (பிப். 22) நடக்கிறது.
ஆஸ்திரேலியா-நியூசிலாந்து 20 ஓவர் போட்டி

ஆஸ்திரேலியா-நியூசிலாந்து இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி கிறிஸ்ட்சர்ச்சில் இன்று நடக்கவுள்ளது.