3 மணி செய்தி சுருக்கம் Top 10 news @3pm
Breaking

ஈடிவி பாரத்தின் 3 மணி செய்தி சுருக்கம்...

கே.எஸ். அழகிரி மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கக்கோரி மாணவர் வழக்கு

அங்கீகாரம் இல்லாமல் கல்லூரி நடத்தி மோசடி செய்ததாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி, அவரது குடும்பத்தினர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கக்கோரி பாதிக்கப்பட்ட மாணவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.

கேரளா வந்தடைந்த ராகுல்

பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக காங்கிரஸ் முன்னாள் தலைவரும், வயநாடு மக்களவை உறுப்பினருமான ராகுல் காந்தி கேரளா வந்தடைந்தார்.

அதிமுகவைக் காக்க விளக்கேற்றி உறுதிமொழி எடுங்கள் - ஓபிஎஸ், ஈபிஎஸ் கடிதம்

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளன்று கழகத் தொண்டர்கள் அனைவரும் அவர்களது வீடுகளில் விளக்கேற்றி, அதிமுகவைக் காப்போம் என உறுதிமொழி ஏற்க வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

அரசியல் கட்சி தலைவர்களுக்கு சமூக வலைதளம் இன்னொரு களம்

சட்டப்பேரவைத் தேர்தலில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட புதிய வாக்காளர்கள் வாக்களித்தனர். அவர்கள் அனைவருமே சமூக வலைதளங்களில் பெரும்பாலும் தீவிரமாக இயங்கிய காலக்கட்டம் அது.

தேனியின் 16ஆவது ஆட்சியராக 'கிருஷ்ணனுண்ணி' இன்று பொறுப்பேற்பு!

மாவட்டத்தின் 16ஆவது ஆட்சியராகத் தமிழ்நாடு நிதித் துறை இணைச் செயலாளராகப் பணியாற்றிவந்த கிருஷ்ணனுண்ணி இன்று (பிப். 22) பொறுப்பேற்றுக் கொண்டார்.

நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் ஜாமீன் கோரிய வழக்கு ஒத்திவைப்பு

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த வழக்கில் ஜாமீன் கோரி ரஷீத் தொடர்ந்த வழக்கை பிப்ரவரி 24ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

நாராயணசாமி ராஜினாமா: கவிழ்ந்தது காங்கிரஸ் ஆட்சி

புதுச்சேரியில் காங்கிரஸ் அரசு பெரும்பான்மையை இழந்ததாக சபாநாயகர் அறிவித்ததையடுத்து, முதலமைச்சர் நாராயணசாமி துணைநிலை ஆளுநரிடம் ராஜினாமா கடிதத்தை அளித்தார்.

மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு வேலூர் ஆட்சியர் உதவி

வேலூர் மாவட்டத்தைச் சார்ந்த கலைவாணி என்னும் மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு உதவித்தொகை, பசுமை வீடு திட்டம் ஆகிய நலத்திட்டங்கள் கிடைக்க ஆட்சியர் உதவினார்.

ஐஎஸ்எல்: பிளே ஆஃப் வாய்ப்பை இழந்தது பெங்களூரு!

ஐஎஸ்எல் தொடரில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் எஃப்சி கோவா அணி 2-1 என்ற கோல் கணக்கில் பெங்களூரு எஃப்சி அணியை வீழ்த்தியது.

அதிக விலைக்கு விற்பனையானதா தனுஷின் ஜகமே தந்திரம்?

தனுஷ் நடித்துள்ள 'ஜகமே தந்திரம்' திரைப்படத்தை அதிக விலை கொடுத்து நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

    About us Privacy Policy
    Terms & Conditions Contact us

    • ETV
    • ETV
    • ETV
    • ETV

    Copyright © 2021 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.
    ETV

    INSTALL APP

    ETV

    CHANGE STATE

    ETV

    SEARCH

    ETV

    MORE

      • About us
      • Privacy Policy
      • Terms & Conditions
      • Contact us
      • Feedback

      Copyright © 2021 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.