7 மணி செய்திச்சுருக்கம் Top 10 news @ 7 PM
ஈடிவி

ஈடிவி பாரத்தின் 7 மணி செய்திச்சுருக்கம்.

1 டூல்கிட் வழக்கில் திஷா ரவிக்கு ஒரு நாள் போலீஸ் காவல்!

டெல்லி: டூல்கிட் வழக்கில் பெங்களூருவை சேர்ந்த திஷா ரவிக்கு ஒரு நாள் போலீஸ் காவல் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2 மம்தா உறவினர்களுக்கு நோட்டீஸ் அனுப்பிய சிபிஐ!

கொல்கத்தா: நிலக்கரி சுரங்க முறைகேடு வழக்கில் மம்தாவின் உறவினர்களான மேனகா கம்பீர், ருஜிரா பந்தோபாத்யாய் ஆகியோருக்கு சிபிஐ நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

3 திருமண மண்டபங்களில் ராணுவ வீரர்கள் - கரோனாவை கட்டுப்படுத்த கர்நாடக அரசு தீவிரம்!

பெங்களூரு: கரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வரும் நிலையில், கர்நாடக அரசு மீண்டும் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்தியுள்ளது.

4 போலி ஆவணங்களைக் கொண்டு பாஸ்போர்ட் பெற்றுவந்த கும்பல் - 6 பேர் அதிரடி கைது!

நிஜாமாபாத் மாவட்டத்தில் போலி ஆவணங்களைக் கொண்டு பாஸ்போர்ட் (கடவுச்சீட்டு) பெற்றுவந்த கும்பலைச் சேர்ந்த 6 பேரை காவல் துறையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.

5 டூல்கிட் வழக்கு: மேலும் இருவரிடம் விசாரணை!

டெல்லி: டூல்கிட் வழக்கில் நிகிதா ஜேக்கப், சாந்தனு ஆகியோரிடம் டெல்லி சைபர் பிரிவு காவல்துறை விசாரணை மேற்கொண்டுவருகிறது.

6 ’முதலமைச்சருக்கு சொல் புத்தியும் இல்லை; சுய புத்தியும் இல்லை’

ஈரோடு: பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்தாமல் மத்திய மாநில அரசுகள் மக்களை சாட்டை கொண்டு அடிப்பதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார்.

7 புதுச்சேரியில் பாஜக செய்வது ஒத்திகை - நாளை தமிழ்நாட்டிலும் நடக்கலாம்?

புதுச்சேரியில் நாராயணசாமி தலைமையிலான ஆட்சியை பாஜக கலைத்திருப்பது ஒத்திகை எனவும், அதே நாடகம் நாளை தமிழ்நாட்டிலும் நடைபெறலாம் எனவும் சிதம்பரம் மக்களவை உறுப்பினர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

8 கோபி வேளாண்மை உற்பத்தியாளர் சங்கத்தில் மசாலா பொடி தயாரிக்க திட்டம்

ஈரோடு: கோபிசெட்டிபாளையம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் மசாலா பவுடர் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது என அச்சங்கத்தின் தலைவர் காளியப்பன் தெரிவித்தார்.

9 தாய்ப்பால் வங்கியை தொடங்கி வைத்த அமைச்சர் கடம்பூர் ராஜூ

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தாய்ப்பால் சேகரிக்கும் அமிர்தம் தாய்ப்பால் வங்கியை அமைச்சர் கடம்பூர் ராஜூ இன்று தொடங்கிவைத்தார்.

10 பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் திமுக ஆர்ப்பாட்டம்!

திருச்சி, கோயம்புத்தூர், நாகப்பட்டினம், விழுப்புரம், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    About us Privacy Policy
    Terms & Conditions Contact us

    • ETV
    • ETV
    • ETV
    • ETV

    Copyright © 2021 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.
    ETV

    INSTALL APP

    ETV

    CHANGE STATE

    ETV

    SEARCH

    ETV

    MORE

      • About us
      • Privacy Policy
      • Terms & Conditions
      • Contact us
      • Feedback

      Copyright © 2021 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.