உதயநிதிக்கு இடம் அறிவாலயத்தில் மட்டுமா, கோட்டையிலுமா?
uthaya

முக்கியமாக, எதிர் முகாமைச் சேர்ந்த ஓபிஎஸ் தனது மகனை வளர்த்துக்கொண்டிருக்கிறார். அவருக்கு நிகராக தமது முகாமிலிருந்து ஒருவரை அனுப்ப வேண்டும் என அறிவாலயம் நினைக்கிறது. அதை உதயநிதி மூலம் நிறைவேற்ற நினைப்பதாக கூறப்படுகிறது.

கருணாநிதி உயிருடன் இருந்தபோது வாரிசு அரசியல் என்று திமுக மீது இருந்த விமர்சனம் ஸ்டாலின் காலத்திலும் தொடர்கிறது. தனக்குப் பின் கட்சிக்கு குடும்பத்திலிருந்து யாரும் வரமாட்டார்கள் என்று ஸ்டாலின் கூறிய பிறகு திமுக இளைஞரணிச் செயலாளராக உதயநிதி அறிவிக்கப்பட்டார்.

இதனால், திமுக ஒரு கம்பெனி என முதலமைச்சர் பழனிசாமி விமர்சித்தது போல் ஏராளமான விமர்சனங்களை அறிவாலயம் சந்தித்தது. ஆனாலும், உதயநிதி ஸ்டாலின் உற்சாகம் குறையாமல் துடிப்போடு களமாடிக்கொண்டிருக்கிறார். அவரை கட்சியும் அவ்வாறே அறிவுறுத்தி அனுப்புகிறது.

kootam

ஆர்ப்பாட்டம் என்றால் முன்னால் நிற்பது, கூட்டணிக் கட்சிகள் குறித்த விஷயத்தை மேடையில் படார் என்று பேசுவதும், ஊடகங்களிடம் சகஜமாக நெருங்குவதையும் உதயநிதி கொண்டிருக்கிறார்.

ஆனால், அந்த விஷயங்கள் எல்லாம் பின்னாளில் கோட்டைக்குப் பாதை போடுவதற்காக அவர் செய்கிறார் என ஒரு தரப்பினர் கூறுகின்றனர். இந்தச் சூழலில் அதனை மெய்ப்பிக்கும் விதமாக அவருக்கு வரும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுக்கப்படும் சூழல் உருவாகியிருப்பதாக ஒருசிலர் கூறுகின்றனர்.

இளைஞரணிச் செயலாளராக அவர் மக்கள் மனதில் பதிந்துவிட்டார். எனவே அவர் தேர்தலில் நின்றால் வெற்றி பெறுவது சற்று கடினமில்லை என்று அறிவாலயம் நினைக்கலாம் என பேசப்படுகிறது.

kootam

முக்கியமாக, எதிர் முகாமைச் சேர்ந்த ஓபிஎஸ் தனது மகனை வளர்த்துக்கொண்டிருக்கிறார். அவருக்கு நிகராக தமது முகாமிலிருந்து ஒருவரை அனுப்ப வேண்டும் என அறிவாலயம் நினைக்கிறது. அதை உதயநிதி மூலம் நிறைவேற்ற நினைப்பதாக கூறப்படுகிறது.

இருப்பினும், ஏற்கனவே வாரிசு அரசியல் என்ற பட்டம் மீண்டும் தற்போது தலை தூக்க தொடங்கியுள்ளது. அதற்கு காரணமே உதயநிதிதான் என்றும் ஒரு தரப்பினர் பேசிக்கொள்கின்றனர்.

kootam

எது எப்படியோ உதயநிதியை வைத்து ஒரு பந்தயம் நடந்துகொண்டிருக்கிறது. அந்த பந்தயத்தில் வெற்றி பெற்று அவருக்கு கோட்டையில் இடம் கிடைக்குமா, இல்லை அறிவாலயத்தில் மட்டும்தான் அவருக்கு இடமா என்பதற்கு காலம் பதில் வைத்திருக்கிறது.

    About us Privacy Policy
    Terms & Conditions Contact us

    • ETV
    • ETV
    • ETV
    • ETV

    Copyright © 2021 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.
    ETV

    INSTALL APP

    ETV

    CHANGE STATE

    ETV

    SEARCH

    ETV

    MORE

      • About us
      • Privacy Policy
      • Terms & Conditions
      • Contact us
      • Feedback

      Copyright © 2021 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.