வி.ஜே. சித்ராவின் 'காலங்கள் கரைகிறதே'
வி.ஜே.சித்ராவின்

சென்னை: மறைந்த சின்னத்திரை நடிகை வி.ஜே. சித்ரா நடித்துள்ள கால்ஸ் படத்தின் பாடலான 'காலங்கள்' சாதனைப் படைத்துள்ளது.

நிகழ்ச்சித் தொகுப்பாளினி, சின்னத்திரை நடிகை, நடனக் கலைஞர் எனப் பன்முகத்திறமை கொண்டவர் சித்ரா. இவர், டிசம்பர் மாதம் 9ஆம் தேதி தனியார் விடுதியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

சித்ரா இறப்பு அதிர்ச்சி

சின்னத்திரை நாடகங்கள் மூலம் தமிழ் மக்களின் உள்ளங்களில் மட்டுமல்லாது இல்லங்களிலும் நீங்கா இடம்பிடித்தவர் வி.ஜே. சித்ரா. அவர் திடீரென இறந்தது தமிழ்நாட்டில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

காலங்கள் கரைகிறதே

அவரின் மரணம் ரசிகர்களுக்கு அதிர்ச்சியையும் வருத்தத்தையும் அளித்த நிலையில் அவர் இறப்பிற்கு முன் நடித்த கால்ஸ் படத்தின் ட்ரெய்லர் வெளிவந்த இரண்டே நாள்களில் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. தற்போது அப்படத்தின் 'காலங்கள் கரைகிறதே' என்னும் பாடல் ஒன்றும் வெளியாகி உள்ளது.

பிப். 26 - திரையில்...

அது தற்போது யூடியூப்பில் 5 லட்சம் பார்வையாளர்களைக் கடந்து ட்ரென்டிங்கில் 4ஆம் இடத்தில் உள்ளது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் தொடங்கி தற்போது வெளியிட்ட பாடல் வரை மக்கள் மகத்தான ஆதரவு தெரிவித்துவருகின்றனர். இப்படம் வரும் 26ஆம் தேதியன்று திரைக்கு வரத் தயாராகவுள்ளது.

வி.ஜே.சித்ராவின் கால்ஸ் படம் படைத்த சாதனை!
வி.ஜே. சித்ராவின் கால்ஸ் படம் படைத்த சாதனை!
இது குறித்து, இப்படத்தின் இயக்குநர் சபரீஷ் கூறும்போது, "வி.ஜே. சித்ராவின் மரணத்திற்குப் பிறகும் மக்கள் அவர் மீதும் அவர் நடித்துள்ள படத்தின் மீதும் அளவற்ற அன்பினைப் பொழிந்துள்ளனர்.
அனைவரும் படத்தை திரையரங்குகளில் சென்று பார்க்க வேண்டும், இப்படத்திற்காக உழைத்த நடிகர்கள், தொழில்நுட்ப உதவியாளர்கள், தயாரிப்பாளர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி" எனக் குறிப்பிட்டுள்ளார்.
    About us Privacy Policy
    Terms & Conditions Contact us

    • ETV
    • ETV
    • ETV
    • ETV

    Copyright © 2021 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.
    ETV

    INSTALL APP

    ETV

    CHANGE STATE

    ETV

    SEARCH

    ETV

    MORE

      • About us
      • Privacy Policy
      • Terms & Conditions
      • Contact us
      • Feedback

      Copyright © 2021 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.