'ஆரிய-திராவிடப் போரை முன்னின்று நடத்துவோம்' ஆ.ராசா சூளுரை!
we-will-lead-the-aryan-dravidian-war-says-a-raja-mp

சென்னை: ஆரிய திராவிடப் போர் நாடு முழுவதும் நடக்கும் என்றும், அதனை திமுக முன்னின்று நடத்தும் என்றும் நீலகிரி மக்களவை உறுப்பினர் ஆ.ராசா தெரிவித்தார்.

பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து, சென்னை வடகிழக்கு மாவட்ட திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் திருவொற்றியூர் பெரியார் நகரில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் மாதவரம் சுதர்சனம் தலைமை வகித்த கண்டன ஆர்ப்பாட்டத்தில், தி.மு. தனியரசு, கே.பி. சங்கர், நீலகிரி மக்களவை உறுப்பினர் ஆ.ராசா ஆகியோர் பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.

பின்னர் அவர் பேசியதாவது,"காங்கிரஸ், திமுக ஆட்சிக்காலத்தில் பெட்ரோல், டீசல் விலை குறைவாக இருந்தது. ஆனால் பாஜக, அதிமுக ஆட்சியில் பெட்ரோல் விலை கடுமையாக அதிகரித்துள்ளது. இதன் காரணமாக, அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு பொது மக்களை கடுமையாக பாதித்துள்ளது.

அண்டை நாடுகளாக இலங்கை, பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் பெட்ரோல் விலை குறைவாக உள்ளது. ஆனால், நமது நாட்டில் மட்டும்தான் பெட்ரோல் விலை அதிகமாகவுள்ளது. பொது மக்களின் மீது அக்கறை இல்லாத அரசாக இது இருக்கிறது. ஜிஎஸ்டி வரியால் பொது மக்கள் அவதிப்படுகின்றனர். நீட் தேர்வால் மாணவர்கள் அவதிப்படுகின்றனர்.

ஆர்ப்பாட்டத்தில் சூளுரைத்த ஆ.ராசா!

உச்ச நீதிமன்றத்தால் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட ஜெயலலிதா இருந்தவரை, நீட் தேர்வு, ஜிஎஸ்டி வரவில்லை, மோடியை துணிவோடு அவர் எதிர்த்தார். ஆனால், ஜெயலலிதாவின் பெயரை கூறிக்கொண்டிருக்கும் தற்போதுள்ள அதிமுக அரசு, அமித்ஷா உதவியாளர் வந்தால் கூட அவரது காலை கழுவிவிடுவார்கள். தமிழ்நாட்டின் நிலை மோசமாக உள்ளது.

பெட்ரோல் விலை உயர்வுக்கு காரணம் மோடியின் மோசமான பொருளாதார கொள்கைதான். மோடியின் மக்கள் விரோத ஆட்சியை எதிர்ப்பதற்கு ஊடகவியலாளர்கள், அரசியல் தலைவர்கள் அச்சப்படுகின்றனர். மோடியை எதிர்ப்பவர் வீட்டில் ரெய்டு நடப்பதை பார்க்கமுடிகிறது. இப்படி அச்சமூட்டி மேற்கு வங்கத்தில் சில எம்எல்ஏக்களை பாஜக தன்பக்கம் இழுத்துவிட்டது. இந்தியாவில் அனைத்து தலைவர்களும் மோடியை எதிர்க்க அச்சப்பட்டுவரும் சூழலில், ஸ்டாலின் மட்டுமே துணிச்சலோடு மோடியை எதிர்க்கிறார்.

ஆரிய திராவிடப் போர் இந்தியா முழுவதும் நடக்கும், அதை நாங்கள் முன்னின்று நடத்துவோம். ஓரிரு மாதங்களில் ஸ்டாலின் தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆவதோடு, பிரதமரை தீர்மானிக்கக்கூடிய ஒரு தலைவராக இருப்பார்" என்றார்.

கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாநில மீனவர் அணிச் செயலாளர் பத்மநாபன், நிர்வாகிகள் கண்ணதாசன், ராமநாதன், முருகேசன், ஆதி குருசாமி, திரிசங்கு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: ’பாஜகவும் அதிமுகவும் இனி ஒருபோதும் ஆட்சிக்கு வரமுடியாது'

    About us Privacy Policy
    Terms & Conditions Contact us

    • ETV
    • ETV
    • ETV
    • ETV

    Copyright © 2021 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.
    ETV

    INSTALL APP

    ETV

    CHANGE STATE

    ETV

    SEARCH

    ETV

    MORE

      • About us
      • Privacy Policy
      • Terms & Conditions
      • Contact us
      • Feedback

      Copyright © 2021 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.