
கடலூர்: திடீரென பெய்த கனமழையால் அறுவடைக்கு தயாராக இருந்த பயிர்கள் அனைத்தும் மழைநீரில் சாய்ந்து முளைக்க தொடங்கியுள்ளன.
கடலூர் மாவட்டத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (பிப்.21) முதல் கனமழை பெய்துவருகிறது. இதன் காரணமாக பண்ருட்டி அருகேயுள்ள குமளங்குளம், வெள்ளக்கரை, திருமாணிகுழி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் பயிரிடப்பட்ட 100க்கும் மேற்பட்ட ஏக்கர் பயிர்கள் மழைநீரில் மூழ்கின.
இன்னும் சில தினங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த பயிர்கள் மழைநீரில் மூழ்கியதால் முளைக்க தொடங்கியுள்ளன.
இதனால் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.20ஆயிரத்திற்கும் மேல் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என பாதிக்கப்பட்ட விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதையும் படிங்க: மயிலாடுதுறையில் தொடர் மழையால் விவசாயம் பாதிப்பு!