
திண்டுக்கல்: கொடைக்கானல் சுற்றுலாத் தளங்களில் பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்க வழிவகை செய்யுமாறு சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதியில் பிளாஸ்டிக் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகள் அதிகம் ரசிக்கும் முக்கிய சுற்றுலா தளங்களான மோயர் பாயிண்ட், பைன்மரகாடுகள், தூண்பாறை, குணா குகை உள்ளிட்ட இடங்கள் வனத்துறை கட்டுப்பாட்டில் அமைந்துள்ளன.

பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு கொடைக்கானல் மலைப் பகுதியில் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் சுற்றுலா தளங்களில் உள்ள கடைகளில் பிளாஸ்டிக் உபயோகம் அதிகரித்துள்ளது.
இதற்கு உடனடியாக வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். வனவிலங்குகளும் பிளாஸ்டிக் பயன்பாட்டால் மிகுந்த தொந்தரவுக்கு ஆளாகி உயிரிழக்கும் சூழல் நிலவி வருகிறது என்பதால் மாற்று ஏற்பாடு செய்து தர வேண்டுமெனவும் கோரிக்கை எழுந்துள்ளது.
இதையும் படிங்க: கொடைக்கானல் மயிலாடும்பாறையை திறக்க சுற்றுலா பயணிகள் கோரிக்கை!