
காஞ்சிபுரம்: ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள பாஜக பிரமுகர் அறிவழகன் வீட்டில் வருமானவரித் துறையினர் சோதனை செய்து வருகின்றனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த நெமிலி பகுதியில் வசித்து வருபவர் தொழிலதிபர் அறிவழகன் (45). இவர் ஸ்ரீபெரும்புதூர் அதன் சுற்றுவட்டாரங்களில் ஸ்கிராப் பிசினஸ், ரியல் எஸ்டேட், மேன் பவர் சப்ளை, தொழில்களை செய்துவருகிறார். அதுமட்டுமல்லாது பாஜக கட்சியில் காஞ்சிபுரம் மாவட்ட பட்டியலின துணைத் தலைவராக உள்ளார்.
இந்நிலையில், அறிவழகன் வீட்டில் நேற்று (பிப்.22) காலை முதல் வருமானவரித் துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சோதனையின்போது அவரது வீட்டிலிருந்து வருமானவரித் துறையினர் முக்கிய ஆவணங்களை கைப்பற்றியுள்ளனர். அந்த ஆவணங்கள் அடிப்படையில் அறிவழகனிடம் வருமானவரித் துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
இதையும் படிங்க: சரிவிகித உணவு உட்கொள்ளுதல் குறித்த விழிப்புணர்வு ஸ்டிக்கர் ஒட்டும் பணி!