3 மாதத்திற்கு ஒரு பிரச்னையை எழுப்பும் மோடி - கே.எஸ் அழகிரி குற்றச்சாட்டு
Breaking

பிரதமர் நரேந்திர மோடி மூன்று மாதங்களுக்கு ஒரு புதிய பிரச்னையை ஏற்படுத்தி வருகிறார் என காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் கே.எஸ். அழகிரி குற்றம்சாட்டியுள்ளார்.

கன்னியாகுமரி: அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வரும் 27, 28 மற்றும் மார்ச் 1 ஆகிய தேதிகளில் தென்னிந்தியாவில் தேர்தல் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அச்சமயத்தில் அவர் மார்ச் 1ஆம் தேதி கன்னியாகுமரிக்கு வருகை தருகிறார். அப்போது அவருக்கு உற்சாக வரவேற்பு அளிப்பதற்காக செய்ய வேண்டிய ஏற்பாடுகள் குறித்து இன்று நாகர்கோவிலில் கட்சி நிர்வாகிகளிடம் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் கே.எஸ் அழகிரி ஆலோசனை நடத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "பெட்ரோல் டீசல் விலை ஏற்றத்தை குறைக்க எந்த திட்டமும் மோடி அரசிடம் இல்லை. மோடிக்கு 52 இன்ச் மார்பு இருக்கலாமே தவிர மக்களின் பொருளாதாரத்தை சிந்திக்க கூடிய ஆற்றல் கிடையாது.

மோடி மூன்று மாதத்திற்கு ஒரு முறை ஒரு புதிய பிரச்னையை ஏற்படுத்தி வருகிறார். ஒரு பிரச்னையையும் தீர்க்க இயலாத அரசாக மோடி அரசு தோல்வி அடைந்துள்ளது. பணமதிப்பு இழப்பு திட்டத்தை கொண்டு வந்தார் அது வெற்றி அடையவில்லை. வெற்றியடைவில்லை என்பதை மோடி நாடாளுமன்றத்தில் தெரிவிக்க வேண்டும்.

சிறுபான்மை மக்களின் போராட்டங்களுக்கு எதிராக வழக்கு தொடர்ந்து விட்டு, தற்போது அனைத்து வழக்குகளும் திரும்பப்பெற வேண்டும் என்று கூறினால் சிறுபான்மையினரின் வாக்குகள் கிடைக்காது. எடப்பாடி பழனிசாமியின் இந்த அறிவிப்பை காங்கிரஸ் கடுமையாக கண்டிக்கிறது. எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டி இத்தனை நாட்கள் ஆகியும் இந்த அரசால் இரண்டாவதாக ஒரு கல்லை கூட எடுத்து வைக்க முடியவில்லை. இது அதிமுக அரசின் தோல்விக்கான சான்று.

தற்போதைய அரசு தனியார் நிறுவனங்கள் மட்டுமே நாட்டில் இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது. தமிழக காங்கிரஸ் செயற்குழு 24ஆம் தேதி கூடுகிறது. அதன்பிறகு தேர்தலில் போட்டியிடும் தொகுதிகள் குறித்து முடிவெடுக்கப்படும். திமுக - காங்கிரஸ் கூட்டணியில் புதிய கட்சிகள் இடம்பெற வாய்ப்பு இல்லை. எங்கள் அணியில் கூட்டணிகள் இறுதி செய்யப்பட்டு விட்டன.

கட்சி நிர்வாகிகளிடம் கே.எஸ் அழகிரி ஆலோசனை

தமிழக சட்டப்பேரவையில் சிறப்பாக செயல்பட்டவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்படும். பழையன கழிதலும், புதியன புகுதலும் என்ற அடிப்படையில் புதிய வேட்பாளர்கள் இடம்பெறுவார்கள். தென்னிந்தியாவில் பாஜகவால் ஒருபோதும் காலூன்ற முடியாது. புதுச்சேரியில் நாராயணசாமி அரசு கவிழாது. இந்த முயற்சியில் பாஜகவிற்கு தோல்வியே ஏற்படும்" என்றார்.

    About us Privacy Policy
    Terms & Conditions Contact us

    • ETV
    • ETV
    • ETV
    • ETV

    Copyright © 2021 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.
    ETV

    INSTALL APP

    ETV

    CHANGE STATE

    ETV

    SEARCH

    ETV

    MORE

      • About us
      • Privacy Policy
      • Terms & Conditions
      • Contact us
      • Feedback

      Copyright © 2021 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.