
டாக்டர் மங்கு ஹனுமந்த ராவ் மதுரையில் அமையவுள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நிர்வாக இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மதுரை மாவட்டம், தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைவதற்கான தொடக்கப் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஏறக்குறைய 2 ஆயிரம் கோடி மதிப்பீட்டிலான இத்திட்டத்தை செயல்படுத்த ஜப்பானைச் சேர்ந்த ஜைகா என்ற நிறுவனத்தோடு மத்திய அரசு ஒப்பந்தம் போட்டுள்ளது.
மத்திய சுகாதாரம், குடும்ப நலத்துறை, இந்தியாவில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையவுள்ள ஜம்மு, குஜராத், மத்தியப் பிரதேசம், தமிழ்நாடு ஆகியவற்றுக்கு நிர்வாக இயக்குனர்களை நியமனம் செய்துள்ளது.
அதன்படி, ஆந்திர மாநிலம் திருப்பதி ஸ்ரீ வெங்கடேஸ்வரா மருத்துவக் கல்லூரியின் முதல்வரும், முதுநிலை மருத்துவ பேராசிரியருமான டாக்டர் மங்கு ஹனுமந்த ராவ், மதுரையில் அமைய உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையின் நிர்வாக இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதையும் படிங்க: அடிக்கடி பணி இடமாற்றம் - வீடியோ பதிவிட்டு வனக்காப்பாளர் தற்கொலை!