கிணற்றுக்குள் தத்தளித்த நாய்க்குட்டிகளை மீட்ட தீயணைப்புத் துறையினர்!
dogs

திருப்பத்தூர்: தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய 2ஆவது குடியிருப்புப் பகுதி அருகே கிணற்றில் உயிருக்குத் தத்தளித்துக் கொண்டிருந்த இரண்டு நாய்க்குட்டிகளை தீயணைப்புத் துறையினர் காப்பாற்றினர். இதன்மூலம் உயிர் அனைத்துக்கும் பொதுவானது என்பதை நிரூபித்துக் காட்டி அசத்திய தீயணைப்புத்துறையினரை பொதுமக்கள் வெகுவாகப் பாராட்டினர்.

திருப்பத்தூர் மாவட்டம், பள்ளிப்பட்டு பகுதிக்குட்பட்ட தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய இரண்டாவது குடியிருப்புப் பகுதியில் அவசர ஒலி எழுப்பிக்கொண்டு தீயணைப்பு வாகனம் ஒன்று வேகமாக சென்றதைப் பார்த்த அப்பகுதி மக்கள் பெரும் அதிர்ச்சியில் யாருக்காவது ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டு இருக்குமோ என்கிற அச்சத்துடன் தீயணைப்பு வாகனத்தைப் பின் தொடர்ந்து படையெடுத்துச் சென்றனர். அப்போது தீயணைப்பு வாகனத்தைப் பின்தொடர்ந்து சென்ற பொதுமக்களுக்கு பெரும் அதிர்ச்சி காத்துக்கொண்டிருந்தது.

வேகமாகச் சென்ற தீயணைப்பு வாகனம் ஒரு கிணற்றின் அருகாமையில் சென்று நின்றது. தீயணைப்பு வாகனத்தை நிறுத்திவிட்டு தகுந்த பாதுகாப்புடன் தீயணைப்பு வீரர்கள் மடமடவென விரைந்து கிணத்திற்குள் இறங்கி, சாக்குப்பையில் மூட்டை கட்டி எதையோ மேலே தூக்கினர். அங்கு என்ன நடக்கிறது என்ற எதிர்பார்ப்பில் இருந்த பொதுமக்கள் பதற்றத்துடன் காத்திருந்தனர்.

திருப்பத்துார்
கிணற்றிலிருந்து நாய்க்குட்டிகளை மீட்கும் தீயணைப்புத் துறையினர்
அப்பொழுது சாக்கை பிரித்ததும் உயிருடன் இரண்டு நாய்க்குட்டிகள் தத்தித்தவழ்ந்து பயத்தின் உச்சத்தில் வெளியே வந்ததைப் பார்த்த பொதுமக்கள் இந்த நாய் குட்டியைக் காப்பாற்றவா உயிரைப் பணயம் வைத்து இவ்வளவு வேகமாக வந்து போராடினார்கள் என்று பொதுமக்கள் வியந்து பார்த்துக் கொண்டிருந்தனர்.
திருப்பத்துார்
கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட நாய்க்குட்டிகள்
தீயணைப்புத்துறையினர் உயிர் என்பது அனைத்திற்கும் பொதுவானவை என்பதை உணர்த்தி செயலில் காட்டியது மட்டுமல்லாமல் பாதுகாப்பு இன்றி இருந்த அங்குள்ள கிணற்றை உடனடியாக மனிதர்கள் வாயில்லா ஜீவன்கள் போன்ற எந்தவிதமான உயிரினங்களும் பாதிக்கப்படாத வகையில் கம்பி வேலி அமைத்து மூடி பாதுகாக்கும்படி, அங்குள்ள பொது மக்களுக்கு அறிவுறுத்திச்சென்றார்கள். உயிரின் முக்கியத்துவத்தை உணர்த்திய தீயணைப்புத்துறையினருக்கு பொதுமக்களிடையே பெரும் பாராட்டுகள் குவிந்தது.

இதையும் படிங்க: திருமண பரிசாக 5 லிட்டர் பெட்ரோல் வழங்கிய உறவினர்!

    About us Privacy Policy
    Terms & Conditions Contact us

    • ETV
    • ETV
    • ETV
    • ETV

    Copyright © 2021 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.
    ETV

    INSTALL APP

    ETV

    CHANGE STATE

    ETV

    SEARCH

    ETV

    MORE

      • About us
      • Privacy Policy
      • Terms & Conditions
      • Contact us
      • Feedback

      Copyright © 2021 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.