
திருச்சி: மணப்பாறையை அடுத்த ஆவாரம்பட்டியில் புனித அந்தோணியார் பொங்கல் விழாவினை முன்னிட்டு புனித இஞ்ஞாசியார் பேராலய திடலில் ஜல்லிக்கட்டு போட்டி நடந்தது. அப்போது கிணற்றுக்குள் தவறி விழுந்த மூன்று காளைகளை தீயணைப்புத் துறையினர் மீட்டனர்.
திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த ஆவாரம்பட்டியில் புனித அந்தோணியார் பொங்கல் விழாவினை முன்னிட்டு புனித இஞ்ஞாசியார் பேராலய திடலில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது.
இதில் மணப்பாறை சுற்றுவட்டார பகுதி மற்றும் திருச்சி, ராமநாதபுரம், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, பெரம்பலூர், மதுரை, அரியலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 801 காளைகளும், 181 காளையர்களும் களம் கண்டனர்.
இப்போட்டியில் கலந்துகொண்ட பொய்கைபட்டி ஜமீன்தார் குமார் ராஜா என்பவரின் ஜல்லிக்கட்டு காளையும், அதே பகுதியைச் சேர்ந்த ஜேம்ஸ் என்பவரின் காளையும் கிணற்றுக்குள் விழுந்துள்ளது.
இதனையடுத்து ஜல்லிக்கட்டு போட்டியில் மீட்புப் பணிக்காக தயார் நிலையில் இருந்த மணப்பாறை தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று, கிணற்றுக்குள் இறங்கி தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருந்த காளையை பொதுமக்கள் உதவியுடன் கயிறு மூலம் உயிருடன் மீட்டனர்.
இதேபோல் அதே பகுதியில் மற்றுறொரு காளையும், அதிகாரிபட்டியில் ஒரு காளை என மொத்தம் மூன்று காளைகளை தீயணைப்புத் துறையினர் மீட்டனர்.
இதையும் படிங்க:வேந்தன்பட்டி ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளைகள்